Sunday, 27 May 2012

குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும்


பெட்ரோல் விலையில் ஏழரையை கூட்டியதால் நாட்டிற்கே ஏழரையாகிவிட்டதாக
எதிர்கட்சிகள் கூச்சலிடுகிறார்களே!
எதற்காக ஏற்றினோம் பெட்ரோல் விலை என்று
யாருக்காவது தெரியுமா?


பின்லாந்து            ரூ.119.00/லிட்டர்
ஜெர்மனி ரூ.113.30/லிட்டர்
பிரிட்டன் ...............ரூ.118.90/லிட்டர்
அங்கேரி ரூ.110.30/லிட்டர்
ஆங்காங் ரூ.108.90/லிட்டர்
இத்தாலி ரூ.118.60/லிட்டர்


மேற்கண்ட வல்லரசு நாடுகளின் பட்டியலில் இந்திய துணைக்கண்டத்தை இணைத்து
பெருமைபட்டுக் கொள்ளவேண்டுமென்ற ஒரு காரணத்தை தவிர வேறு காரணம் ஏதாவது
இருக்கிறதா எங்களுக்கு??

மக்களின் கண்ணீர் மத்திய அரசை வீழ்த்தும் என்கிறதே மாநில அரசு...

உங்களை பார்த்து ஒன்று கேட்டுக்கொள்கிறேன்...

பால்,பேருந்து,மின்சாரம் என நீங்கள் விலையை ஏற்றியபோது ,இடைத்தேர்தலில் உங்களை வீழ்த்தாத கண்ணீர் எங்களை மட்டும் வீழ்த்திவிடுமா??

பெட்ரோல் கம்பெனிகள் லாபம் சம்பாதிப்பதற்காகத்தான் தன்னிச்சையான விலை உயர்வு
என்கிறீர்களே..

பொதுமக்களே !இரவு 12 ம்ணிக்கு மேல் விலை ஏறப்போகுதுன்னு தெரிஞ்சதும்
எல்லாரும் லிட்டருக்கு 7.50 லாபம் பெற,பெட்ரோல் பங்கை நோக்கி படை எடுத்தீங்களே

தனி மனிதர்களாகிய நீங்கள் லாபம் சம்பாதிக்க நினைக்கலாம்..

கவர்ன்மென்ட் கம்பெனி நினைச்சா தப்பா???

இறுதியாக ஒன்றை ம்ட்டும் சொல்லி நிறைவு செய்ய விரும்புகிறேன்...

இந்த 3 ஆண்டுகளில் 16 முறை பெட்ரோல் விலையை ஏற்றிவிட்டோம் என்று குறை சொல்லும் எதிர்கட்சிகளை பார்தது கேட்கிறேன்.

இந்த 3 வருடத்தில் எந்த ஏழை தொண்டராவது பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார் என செய்தி வந்தது உண்டா??

இது மாபெரும் சாதனையில்லையா???

பெட்ரோல் விலையில் செஞ்சுரி அடிக்கும்வ்ரை நாங்கள் ஒயப்போவதில்லை என்று கூறி விடைபெறுகிறேன்...



                                                                    இப்படிக்கு
                                               வட்டச் செயலாளர் வண்டு முருகன்




================================================================================================================================================

நகைச்சு - வை


பெட்ரோல் விலை  உயர்வை பொறுத்துக்கொண்டோம்.டீசல் விலையில்
கை வைத்தால் புரட்சி வெடிக்கும் என எச்சரிக்கிறேன்

ஆஹா.. தலைவருக்குத்தான் ஏழைங்க மேல என்னா கருணை...

அடச்சே! தலைவரு வைச்சிருக்கிற நாலு காருமே டீசல் வண்டிய்யா......
-----------------------------------------------------------------------------------------------------------

"நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்த பிறகு பெட்ரோல் விலை  உயர்த்தியது
ம்ன்னிக்க முடியாத துரோகம்"

ஏன் தலைவரே ,அப்பவே சொல்லியிருந்தா என்ன செஞ்சிருப்பீங்க??

எல்லா எம்.பி களும் விலையேறதுக்கு முன்னாலயே நிறைய பெட்ரோலை ஸ்டாக் வாங்கி வைச்சிருந்திருப்போம்.
------------------------------------------------------------------------------------------------------------



பெட்ரோல் விலை  உயர்வை அறிவிச்சதும் நம்ம தலைவர் ஆக்ரோஷ்மாய் பொங்கி எழுந்திட்டாரு..

என்ன உடனே ஆர்ப்பாட்டத்திற்கு கிளம்பிட்டாரா?

சேச்சே! உடனே காரை எடுத்திட்டு பெட்ரோல் பங்க் போய் டாங்கை புல்
பண்ணிட்டுதான் வந்தாரு...

------------------------------------------------------------------------------------------------------------